அதிமுகவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கும்  அண்ணாமலை  குறித்து அமித்ஷாவிடம் புகார் சொல்லஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன்,கே.பி.முனுசாமி நேற்று டெல்லி சென்றனர். அதிமுக நிர்வாகிகளை சந்திப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா  நேரம் தரவில்லை.

இந்நிலையில், அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணியில் தொடர வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுகவின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், அண்ணாமலையை மாற்ற வேண்டும் என ஜெ.பி.நட்டாவிடம் வைத்த கோரிக்கை மறுக்கப்பட்டதை தொடர்ந்து இ.பி.எஸ்ஸிடம் வலியுறுத்தியுள்ளனர்.