தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில் அவர் அடுத்த மாதம் சென்னை திரும்புகிறார். அவர் வந்தவுடன் தமிழக பாஜகவில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகம் உட்பட நாடு முழுவதும் பாஜக கட்சியில் உறுப்பினர் சேர்க்கை என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் திரும்பியது மிகப்பெரிய அளவில் ஒரு பிரம்மாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாநாடு கோவையில் நடைபெறும் என்றும் அது மிகப்பெரிய அளவில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் பாஜக கட்சியின் தமிழக முக்கிய தலைவர்கள் உட்பட மத்திய மந்திரிகள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டை தொடர்ந்து தமிழக பாஜக கட்சிகள் அடுத்தடுத்து தேர்தல் வெற்றியை நோக்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறப்படுகிறது.