டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு 7:30 மணிக்கு பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் நிலையில் அவருடன் சில மத்திய அமைச்சர்களும் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டெல்லியில் பிரதமர் மோடி கொடுக்கும் தேநீர் விழாவில் கலந்து கொள்பவர்கள் மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில், பாஜக கட்சியின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கும் தேநீர் விழுந்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலையிடம் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நான் தமிழகத்திலேயே என்னுடைய பணிகளை தொடங்க இருக்கிறேன் என்று கூறினார். இதன் மூலம் அவருக்கு பாஜக மேலிடம் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து இன்று 15 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சந்திரசேகர், ராம் மோகன் நாயுடு, மன்மோகன் சமல், பிப்லப் தேவ், கிரண் ரிஜஜு, சுனில் தாக்கரே, அனுபிரியா படேல், பிரபுல் படேல், சிராக் பஸ்வான், சோனோவால், சார்பானந்த், தர்மேந்திர பிரதான் மற்றும் அஸ்வினி வைஸ்ணவாகிய ஒரு பொறுப்பேற்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.