
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆதிதிராவிடர் விடுதிகளில் உணவு சரியாக தரமானதாக இல்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் இருக்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, அண்ணாமலை ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்.
அவருக்கு சந்தேகமாக இருந்தால் நேரில் வந்து ஆய்வு செய்து பார்க்கட்டும். டெல்லி சென்ற அண்ணாமலையை பளார் பளார் என்று அறைவிட்டு அனுப்பியுள்ளனர். அதை மறைப்பதற்காக இங்கே வந்த பிறகு ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். இங்கே வந்த பிறகு அதை மறைப்பதற்கு ஏதாவது பேசித்தானே ஆக வேண்டும். மேலும் அவருக்கு சந்தேகம் இருந்தால் நேரில் வந்து ஆய்வு செய்து பார்க்க சொல்லுங்கள் என்று கூறினார்.