
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தன்னுடைய 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். முதல்வர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி தான். திமுக தலைவர் ஆக பொறுப்பேற்ற பிறகு எதிர்கொண்ட முதல் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வரானார். அவர் இன்று தன்னுடைய 72 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அந்த பதிவில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அரசியல் களத்தில் பாஜக மற்றும் திமுக இரு வேறு துருவங்களாக இருக்கும் நிலையில் ஒருவருக்கொருவர் விமர்சிக்கிறார்கள். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொன்னது கவனத்தை ஈர்த்துள்ளது.
Birthday greetings to Tamil Nadu CM Thiru MK Stalin. May he lead a long and healthy life.@mkstalin
— Narendra Modi (@narendramodi) March 1, 2025