மிக ஆபத்தான பாம்பான 12 அடி நீளம் உள்ள கிங் கோப்ராவின் தலை மேல் ஒருவர் முத்தமிடும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த கரு நாகம் தென் கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கக்கூடிய ஒரு பாம்பு இனம் ஆகும். இதுவே உலகின் மிக நீளமான நச்சுப் பாம்பு ஆகும். பொதுவாக அடர்ந்த காட்டுப் பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாக கொள்கிறது.

இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே மனிதனை கொன்றுவிடும். பொதுவாக இந்த பாம்புகள் 12 -13 அடி நீளம் வரை இருக்கும். அந்த வீடியோவில் 12 அடி நீளம் உள்ள ராஜ நாகப்பாம்பின் தலையில் ஒருவர் முத்தமிடும் வினோத வீடியோ வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த வீடியோ சமூகஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.