நடிகை சமந்தா தென்னிந்திய நடிகைகளில் முன்னணி  நடிகையாவார். சென்னையில் பிறந்த இவருக்கு யசோதா என்ற பெயரும் உண்டு. இவர் சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ – இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும், பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார்.

பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். தற்போது பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.  இந்நிலையில், தற்போது இவரது கல்லூரி கால புகைப்படம் எனக்கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.