
சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ, நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் ஆற்றின் மேற்பரப்பில் தண்ணீரை தொடாமல் புஷ்அப்ஸ் செய்வது போன்று காணப்படுகிறது. இந்த காட்சி ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் முதலில் ஆற்றில் சறுக்கி வந்ததும், பின்னர் பீர் கேனை காதலியின் கையிலிருந்து வாங்கி மகிழ்ச்சியுடன் திறப்பதும், பின்னர் தண்ணீரின் மேல் புஷ்அப்ஸ் செய்வதும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோ @mean_nerd1 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை 2.75 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர். ஒருவர், “முதலில் இதை முட்டாள்தனமாக நினைத்தேன், ஆனால் பிறகு திகைத்தேன்” என பதிவிட்டுள்ளார். இன்னொருவர், “இதெல்லாம் AI ஆல் உருவாக்கப்பட்டதா?” எனக் கேட்டுள்ளார். பலரும், “நீரின் மேல் புஷ்அப்ஸ் செய்வது அடுத்த லெவல்” என பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
இந்நிலையில், இந்த வீடியோ உண்மையா, செயற்கையா என்பதற்கான விவாதம் சமூக வலைதளங்களில் பரவலாக நடைபெற்று வருகிறது. இது எந்த இடத்தில் படம் பிடிக்கப்பட்டது, அந்த நபர் யார் என்பதற்கான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், இத்தகைய வீடியோக்கள் இணையத்தில் பரவி, பார்வையாளர்களிடையே சாகசங்களை வரவேற்கும் நிலையை உருவாக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.