சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு க்யூட் கங்காரு boarding pass-ஐ கையில் பிடித்து, விமானத்துக்குள் செல்ல காத்திருக்கிறது. அந்த நேரத்தில், ஒரு பெண் பயணியும், விமான நிலைய ஊழியருமான மற்றொரு பெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் வீடியோவில் தெரிகிறது. இந்த காட்சி பார்த்த நெட்டிசன்கள், “கங்காரு மிக அமைதியாக காத்திருக்கிறது” எனப் பாராட்டி வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோ Instagram-இல் மட்டும் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இது உண்மையா இல்லையா என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கிடையில், சமூக வலைதளமான X-இல் “Wholesome Side of X” என்ற பக்கம் இந்த வீடியோவை பகிர்ந்து, “இது AI மூலம் உருவாக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது. அதாவது, வீடியோ உண்மையில் நடந்ததல்ல, கணினி தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை காட்சி.

இப்போது சமூக வலைதளங்களில், உண்மையைப் போல் தோன்றும் AI வீடியோக்கள் அதிகம் பரவி வருகின்றன. இந்த கங்காருவின் வீடியோவும் அப்படித்தான். பார்த்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தாலும், அது நிஜம் அல்ல, நவீன தொழில்நுட்பத்தின் விளைவு என்பது தான் உண்மை. மேலும், இவ்வாறு பரவும் வீடியோக்களை நம்மால் நன்கு பரிசீலித்து மட்டுமே நம்ப வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.