இந்தியாவின் T20I விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், தோனி குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சிலர் அவர் விரைவில் ஓய்வுபெறலாம் என கணிக்கின்றனர். இருப்பினும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் போல், சாம்சனும் தோனி தொடர்ந்தும் விளையாட வேண்டும் என விரும்புகிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், “மக்கள் அவருடைய ஓய்வு பற்றி பேசும்போது, என் மனதில் “இன்னும் கொஞ்சம் விளையாடுங்க பாய்” என்ற எண்ணமே வந்தது. இது நம்ம இந்தியர்களின் மனநிலையே. ஒவ்வொருவரும் இதையே நினைப்பார்கள்” என்று  கூறியுள்ளார்.

தற்போது தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடங்கிய நாளிலிருந்து, சென்னை அணியின் தலைவராகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்ட அவர், அணியின் நடுத்தர வரிசையில் பேட்டிங் செய்தார். ஆனால், காலப்போக்கில், அவர் ஒரு சிறப்பு பினிஷராக மாறி விட்டார். அணியின் கேப்டன் பதவி தற்போது மகாராஷ்டிராவை சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் தோனி பலமுறை காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விடுபட்டிருந்தார். இதனால், அவர் விரைவில் ஓய்வு பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அவர் இதுபற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.