அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஹானி மஹ்மூத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொது மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு வினோதமான பழக்கம் இருக்கிறது. இந்த வினோதமான பழக்கத்தை பயன்படுத்தி உணவகங்களில் மீந்து போன உணவை சாப்பிட்டு பணத்தை ‌ சேமித்துள்ளார். அதாவது இவருக்கு உணவு சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம். இந்நிலையில் உயர்தர உணவகங்களில் மீந்து போன உணவை செயலி மூலமாக குறைந்த விலைக்கு விற்பனை செய்வார்கள்.

இப்படி குறைவான விலைக்கு விற்பனை செய்யும் மீந்து போன உணவை மஹ்மூத் வாங்கி சாப்பிட்டுள்ளார். அவர் செயலி மூலம் உணவை வாங்கி சாப்பிட்டது அவருடைய பட்ஜெட்டுக்கு சிறப்பானதாக இருக்கிறது. இதன் மூலம் அவர் 2 வருடங்களில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் பணத்தை சேமித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் ஆண்டுக்கு 80 டன் உணவுகள் வீணாவதாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில் இது போன்ற செயலிகள் மூலம் அந்த உணவுகள் மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.