ரஜினி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற “ஜெயிலர்” படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளில் 95.78 cr, 2வது நாளில் 56.24 cr, விடுமுறை நாளான சனி  68.51 cr, ஞாயிறு 782.36 cr என 4 நாட்களில் 302.89 கோடி வசூல் செய்துள்ளது. திரையரங்கில் இன்னும் கூட்டம் குறையவில்லை. இதனால், விரைவில் ரூ.400 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் ரஜினி சமீப காலமாக பல படங்களில் புகைப்பிடிக்கும், மது அருந்தும் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் அவர் சுருட்டு பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் மது அருந்த வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக் கொண்ட ரஜினி, படத்தில் சுருட்டு மட்டும் பிடிக்கலாமா? என சமூக ஆர்வலர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.