நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் மத்தியில் ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக ஏற்கனவே 4 கட்டமாக வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில் 5 ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் பெயர் இடம்பெற்றுள்ளது. இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிடவுள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடலாம் என்ற செய்திகள் பரவிய நிலையில் அது உறுதியாகியுள்ளது.