ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநில மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி கேரளாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதி சம்பளத்தின் முன்கூட்டியே பெறலாம் என்றும் மகாராஷ்டிராவில் மத்திய அரசு ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளத்தை செப்டம்பர் 27 ஆம் தேதி வரை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே நாளில் ஓய்வூதியம் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்கள் இந்த சலுகைகளை பெறுவார்கள். அவர்களுக்கு முன்கூட்டியே ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா அரசு மாநில அரசு ஊழியர்களுக்கு 4000 ரூபாய் போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

போனஸ் தொகைக்கு தகுதியற்ற ஊழியர்களுக்கு சிறப்பு பணமாக 2750 கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற சேவை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு விழா உதவி தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.