சோசியல் மீடியாவில் வித்தியாசமான உணவு வகைகள் குறித்த தயாரிப்பு வீடியோ அதிக அளவு பகிரப்படும். அப்படி சீனாவில் இருக்கும் ஹோட்டலில் வறுத்த தவளை கறியுடன் கூடிய பீட்சா தயார் செய்யப்பட்ட வீடியோ வரலாகி வருகிறது.

ஒரு ஹோட்டலில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த பீட்சாவிற்கு நடுவே பொறித்த தவளை இருக்கிறது. முட்டைகளை வைத்து தவளையின் கண்களாக வைத்துள்ளனர். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பீட்சாவுக்கு உரிய மரியாதையே போய்விட்டது உள்ளிட்ட கமெண்டுகளை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.