தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீசானது. இதில் பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில்  விஜய் சேத்துபதி  வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் திரைப்படம் வெளியான  11 நாட்களில் உலகம் முழுவதும் 821.85 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.