தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி, விஜயுடன் சேர்ந்து மாஸ்டர், கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது தற்போது லோகேஷ் நடிகர் விஜயை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.‌ இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் லோகேஷ் தன்னுடைய முதல் படமான மாநகரம் படத்தில் ரூபாய் 5 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். அதன் பிறகு கைதி படமும் வெற்றி பெற்றதால் மாஸ்டர் படத்திற்காக இயக்குனர் லோகேஷுக்கு ஒரு கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில் அந்த படமும் வெற்றி பெற்றதால் 3 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு விக்ரம் படத்தில் 10 கோடி சம்பளத்துடன் கமிட்டான லோகேஷ் படம் வெற்றி பெற்றதால் 12 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அதோடு நடிகர் கமல்ஹாசன் 80 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றையும் இயக்குனர் லோகேஷுக்கு பரிசாக வழங்கினார். இந்நிலையில் தற்போது லியோ படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 20 முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட பிரம்மாண்ட இயக்குனர் சம்பளத்தையே லோகேஷ் நெருங்கி விட்டார். இயக்குனர்களில் அதிக சம்பளம் பெறும் இயக்குனர் சங்கர்தான். இவர் இந்தியன் 2 படத்திற்காக 35 முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இனி அடுத்த படத்தில் 40 கோடி சம்பளம் வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.