பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இவர் தற்போது கிங் என்ற படத்தில் தயாரிப்பாளரான சுஜோய் கோஷல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் இயக்குனராக ‌ விரும்பும் நிலையில் அதற்காக பயிற்சி எடுத்து வருகிறார். இதேபோன்று அவருடைய மகள் சுஹானா கான் சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்று விரும்புகிறார்.

இதனால் தான் நடிக்கும் கிங் படத்தில் தன்னுடைய மகளை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க ஷாருக்கான் முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் அவருடைய மகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கதை அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரவேண்டும் என்று விரும்புகிறார். இதன் காரணமாக இந்த படத்தை சுமார் 200 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.