தமிழ் சினிமாவில் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த பத்து நாட்களுக்கு தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள் ஏதும் வராததால் தியேட்டர் வரும் மக்கள் எண்ணிக்கை மிகச் சிறிய அளவே இருக்கிறதாம்.

மேலும் ஐபிஎல் போட்டியால் அந்த எண்ணிக்கையும் சரிந்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த தெலுங்கானா தியேட்டர்கள் சங்கம் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூடுவதாக அறிவித்துள்ளது.