தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மாணவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவருக்கும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் உதவி தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ள நிலையில் தமிழ் புதல்வன் திட்டத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில் பொறியியல் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. BE முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கிய பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.