
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவில் பிசியாக இருந்தாலும் தனது கனவை நோக்கியும் கிடைக்கும் நேரத்தில் அஜித் பயணித்து வருகிறார். அதாவது நடிப்பை தாண்டி சமையல், போட்டோகிராபி மற்றும் துப்பாக்கி சுடுதல் என அனைத்திலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது பைக் டூர் செல்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இதனிடையே துணிவு படத்தை தொடர்ந்து தற்போது அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க மயில் திருமேனி இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் உடல் எடை குறைத்து அஜித் பார்ப்பதற்கு ஸ்லிம்மாக உள்ளார்.
😻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/iNlkZ69w6F
— 🫧. (@CHIV0ed) June 30, 2023