மத்திய அரசாங்கம் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக விவசாயிகளுடைய நலனுக்காக பல திட்டங்களை திட்டி செயல்படுத்தி வருகிறது அந்த வகையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று செங்கோட்டையில் கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தனது சுதந்திர தின உரையில் விவசாயிகளுக்கு யூரியா மானியமாக ரூ. 10 லட்சம் கோடியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் உலகளவில் ஒரு மூட்டைக்கு ரூ. 3,000 மதிப்புள்ள யூரியாவை விவசாயிகளுக்கு ஒரு மூட்டைக்கு ரூ. 300 என்ற மலிவான விலையில் வழங்க சாமத்திய அரசு  யூரியா மானியமாக ரூ .10 லட்சம் கோடியை ஒதுக்கியது என்றும் கூறியுள்ளார்.