உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பழைய மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதாவது வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்காததால் வயதான காலத்திலும் அவர்கள் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அம் மாநிலத்தில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

அதில் ஓய்வூதிய அடிப்படையில் வழக்கறிஞர்களுக்கு மாதம் 15,000 வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அதற்கான பட்ஜெட்டை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பழைய மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதி திட்டம் அமல்படுத்தப்படும் என ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.