போஸ்ட் ஆபீஸ் கணக்கை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் கணக்கு செயலற்றதாகிவிடும். இதை எவ்வாறு புதுப்பிக்கலாம் என்று குறித்து ஒரு சிலர் தெரியாமல் இருக்கிறார்கள். இது குறித்த பதிவை இப்போது பார்க்கலாம். இந்தியாவில் வங்கிகளை விட தற்போது போஸ்ட் ஆபீஸில் ஏராளமானவர்கள் பணத்தை சேமித்து வருகிறார்கள்.

இதில் வட்டி விகிதமும் கூடுதலாக வழங்கப்படுவதால் பெரும்பாலும் மக்கள் போஸ்ட் ஆபிஸை நாடுகிறார்கள். போஸ்ட் ஆபீசில் கணக்கை தொடங்கி அதனை தொடர்ந்து மூன்று வருடங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அதாவது பண பரிவர்த்தனை எதுவுமே செய்யாமல் இருந்தால் கணக்கு செயலாற்றதாக கருதப்படும். இத்தகைய கணக்கை மீண்டும் புதுப்பிக்கலாம். அதற்கு முதலில் கேஒய்சி ஆவணங்கள் மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகத்தை தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.