டெல்லியில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்ற நிலையில் 27 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைக்க இருக்கிறது. டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட பதவியேற்பு விழா நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மோடி உட்பட சுமார் ஒரு லட்சம் பேர் இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதில் ரேகா குப்தா கல்லூரி படிக்கும் போது இருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ரேகா குப்தாவின் ஒரு பழைய வீடியோவை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு மேயர் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக ரேகா குப்தா நின்றார். இந்த தேர்தலில் ரேகா குப்தா தோல்வியடைந்த நிலையில் மேடையில் வைக்கப்பட்டிருந்த மைக் போன்றவற்றை அடித்து உடைத்தார். நீதிமன்றத்தின் உத்தரவை மீறி விடிய விடிய சண்டை மற்றும் வன்முறை நடந்ததால் அங்கு தேர்தலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. நிதானத்தை இழந்து ரேகா குப்தா சண்டை போட்ட நிலையில் அப்போதே இந்த வீடியோவை ஆம் ஆத்மி பகிர்ந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.