மத்திய அரசாங்கம் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய சலுகைகளை தற்போது அறிவித்துள்ளது. 80 வயதை அடைந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய ஓய்வூதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் விதிகள் 2021 இந்த விதி 44 துணைவிதி 6 விதிகளின்படி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை அடைந்த பிறகு விதிகளின் கீழ் ஓய்வூதி மற்றும் கருணை உதவி தொகைக்கு தகுதியுடையவர்கள், 80முதல் 85 வயது வரையிலான மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 20% கூடுதல் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள், 85 முதல் 90 வயது வரையிலான ஓய்வூதியர்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் பெறுவார்கள்.

அதைப்போல 95 முதல் 100 வயதுடைய மூத்த குடிமக்கள் 50% கூடுதல் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 100 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட வயதை அடையும் முதல் நாளிலிருந்து கூடுதல் ஓய்வூதியம் அல்லது சலுகை நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.