சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 2.2 லட்சம் முதல் 2.3 லட்சம் வரை மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் நாளுக்கு நாள் பயணிகளின்  எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், 2 கோடியே 80 லட்சம் பேர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 3 கோடியே 28 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து கொரோனாவின் தாக்கம் 2020-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கவே, மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்த சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும் 2021-ஆம் ஆண்டில் 2 கோடி 53 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டில் 6 கோடியே 9 லட்சத்து 87 ஆயிரத்து 765 பேர் பயணம் செய்து வந்துள்ளனர்.  இதுவரை சென்னை மெட்ரோ ரெயில்களில் கடந்த  7 ஆண்டுகளில் (2015 – 2022) 15 கோடியே 88 லட்சத்து 8 ஆயிரத்து 208 பேர் பயணித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது செய்திகுறிப்பில் வெளியிட்டுள்ளது.