
நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் 10, +2 பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களை இன்று நடிகர் விஜய் சந்திக்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் நடைபெற உள்ள இந்த விழாவில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணாக்கர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
அதன்படி, முதல் இடம் ரூ.25,000, 2ம் இடம் ரூ.15,000, 3ம் இடம் ரூ.10,000 என காசோலையாக வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 234 தொகுதிகளிலும் உள்ள முதல் 3 மூன்று இட மாணவர்களுக்கு உதவித் தொகையாக மட்டும் சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் செலவிடப்பட உள்ளதாக கணிக்கப்படுகிறது.