விண்வெளியை ஆராயும் இந்த தொழில்நுட்ப முன்னேற்ற காலத்திலும் மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.  மலக்குழி மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசு இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழப்புகளை தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது. எந்த ஒரு நிறுவனமோ, தனி நபரோ கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது; இதை மீறினால் அதிகபட்சம் 5 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.