ரயிலில் பயணம் செய்பவராக இருப்பின், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது ஜெனரல் பிரிவில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரயில்வேயின் சிறப்பு வசதிகள் கிடைக்கும். கோடைக்காலத்தில் ஜெனரல் கோசில் பயணம் மேற்கொள்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பயணிகளின் இப்பிரச்சனைகளை நீக்குமாறு ரயில்வேக்கு கடிதம் வந்திருக்கிறது. அதன்பின் ரயில்வே பெரும் முடிவை எடுத்து உள்ளது.

கோடைக்காலத்தில் அதிகரித்து வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை கருதி, ஜெனரல் வகுப்பு பெட்டிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதிசெய்யுமாறு ரயில்வே வாரியம் ரயில்வே மண்டலங்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறது. அதோடு ரயில்களின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கு அருகே மலிவான விலையில் உணவு, குடிநீர் மற்றும் விற்பனை தள்ளுவண்டிகளை ஏற்பாடு செய்வதற்கு அனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் சேவை தரத்தை மேம்படுத்த நியமிக்கப்பட்ட ரயில் நிலையங்களில் ஜெனரல் வகுப்பு பெட்டிகளின் தூய்மையை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.