சாம்சங் நிறுவனமானது புதிய ஸ்மார்ட் ரிங்கை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ரிங் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த மோதிரமானது மனிதனின் வாழ்க்கை முறையை வெளிக்காட்டுகிறது. சாம்சங் ஹெல்த் செயலியில் உள்ள AI,  இது 24 மணி நேரமும் உடல் நலனை கண்காணிக்கிறது. இந்த ரிங் ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் 7 நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.

மேலும் தூக்கத்தைக் கண்காணிப்பது, நபரின் இதயத் துடிப்பு மற்றும் தோலின் வெப்பநிலை ஆகியவற்றைப் பற்றி சொல்கிறது. இதன் விலையானது 33 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.