இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சேமிப்பு என்பது அதிகமாகிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் தங்களுடைய சேமிப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க தொடங்கிவிட்டனர். சேமிப்பாக சிறு தொகையை வைத்திருப்பது எதிர்பாராத தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும். இவ்வாறு நீங்கள் சேமிக்கும் பணத்தை முதலீடு செய்வதற்கு அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி போஸ்ட் ஆபீஸில் வழங்கப்படும் தபால் அலுவலகம் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டமானது சேமிப்பில் மிகப்பெரிய அளவுக்கு உதவும். இந்த RD திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு எளிதாக கடன் கிடைக்கும். இதில் குறைந்தபட்சம் ஒரு வருடமாக தொடர்ந்து டெபாசிட் செய்ய வேண்டும். ஒரு வருடம் கழித்து உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதம் வரை கடன் பெறலாம்.  அதை மொத்தமாகவும் தவணையாகவும் திருப்பிச் செலுத்தலாம். கடனை திருப்பி செலுத்த முடியாவிட்டால் RD கணக்கு முதிர்ச்சடையும்போது கடனும் வட்டி தொகையும் கழிக்கப்படும்.