தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தற்போது கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைப்பதற்காக எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அரசு பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றும் திட்டத்தில் எச்டிஎப்சி வங்கியும் இணைந்துள்ளது. இதில் முதல் கட்டமாக ஐந்து அரசு பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஐந்து ஸ்மார்ட் பள்ளிகளை தமிழக நிதி அமைச்சர் மற்றும் ஹெச்டிஎஃப்சி நிர்வாக இயக்குனர் தொடங்கி வைத்துள்ளனர். மேலும் ஸ்மார்ட் வகுப்பறைகளில் ஸ்மார்ட் இண்டராக்டிவ் பேனல்கள், மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆய்வகம்,புத்தகங்கள் மற்றும் உள்கட்டமைப்புடன் கூடிய நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோன்ற தமிழகம் முழுவதும் 24 அரசு பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளதாகவும் இதனால் 22,000 மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.