ஆஸ்திரேலியாவில் பொது போக்குவரத்து பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டாட்டூ போட்டு கொள்பவருக்கு ஓராண்டு வரை இலவச பயணம் மேற்கொள்ள பாஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் கலந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிளிமா டிக்கெட் தொடங்கப்பட்ட நிலையில் தனிநபர் வாகனத்திற்கு மாற்றாக பொது போக்குவரத்தை பயன்படுத்த ஊக்கப்படுத்தி வருகின்றது. ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் புதிய டாட்டூ கடைகளை கிளிமா டிக்கெட் திறந்து வைத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு பதிவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். எங்களின் கிளிமா டிக்கெட் லோகோவை பச்சை குத்திக் கொண்டால் லோகோவை பொறித்த முதல் மூன்று தைரியமான நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் நீங்கள் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் கிளிமா டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். இதனை பயன்படுத்தி ரயில், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.