இந்தியா முழுவதும் கூகுள் மேப்ஸ் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் முன்பின் தெரியாத இடத்திற்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்வோருக்கு கூகுள் மேப்ஸ் பேருதவி செய்கிறது.

இந்நிலையில் AI உதவியுடன் மேம்பாலங்கள், குறுகிய சாலைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் குறித்த தகவல்களை வழங்க உள்ளதாக கூகுள் மேப் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக இந்தியாவின் 40 நகரங்களுக்கு இந்த சேவை வழங்கப்படும் என்றும் ஆண்ட்ராய்டு செயலியில் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் EV நிறுவனங்களுடன் இணைந்து நாடு முழுவதும் 8000 சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளது.