அமலாக்கத்துறை கைது செய்தபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜூன் 23ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஜூலை 17 ஆம் தேதி  புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜி முதல் வகுப்பு கைதி என்பதால், கட்டில், மெத்தை, மின் விசிறி, டிவி, சிறப்பு உணவு உள்ளிட்ட வசதிகள் சிறையில் அளிக்கப்பட்டு உள்ளன. சிறப்பு உணவாக காலையில், மிளகு வெண் பொங்கல், உப்புமா, கஞ்சி வழங்கப்படும். அவர் இட்லி அல்லது தோசை கேட்டால் தனியாக அவருக்கு அதனை செய்துக் கொடுக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதியம், சாதம், சாம்பார், கூட்டு அல்லது பொரியல் தரப்படும். வாரத்தில் 3 நாள் அசைவம் வழங்கப்படும். சைவம் வேண்டும் என கருதினால் அதுவும் தரப்படும்