
காகம் ஒன்று Tic-tac-toe என்ற விளையாட்டை நபர் ஒருவரோடு விளையாடி வென்ற வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கோஷா என்ற பெயர் கொண்ட இந்த காகம் இது போன்ற புத்திசாலித்தனமான விளையாட்டுகளில் வெற்றிபெற்ற மற்ற விடீயோக்களும் சமூக வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tic-tac-toe விளையாட்டு என்பது இரண்டு கிடைமட்ட கோடுகள் மற்றும் இரண்டு செங்குத்து கோடுகளால் உருவாக்கப்பட்ட இடைவெளிகளில் Xs மற்றும் Os ஐ இரண்டு விளையாட்டு வீரர்கள் மாற்றி மாற்றி அமைக்கும் ஒரு வகையான விளையாட்டு ஆகும். இத்தகைய விளையாட்டை ஒரு காகம் விளையாடி வென்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.