
இந்தியாவில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பாக புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதும் நடைமுறையானது இருந்து வந்தது. ஆனால் இந்த முறை சில வருடங்களுக்கு முன்பு ரத்து செய்த நிலையில் தற்போது மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நடைமுறையால் இந்த வருடம் நவம்பர் மாதத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அறிவியல், கணிதம் உள்ளிட்ட சில பாடங்களில் சோதனை முறையில் அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும், சில மதிப்பெண்களுக்கு இப்படி நடத்தப்படும். தேர்வு எழுதும் மாணவர்களின் ஆய்வு மற்றும் தேடு திறன் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.