
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், ரொட்டி தயார் செய்யும் போது ரொட்டியின் மீது எச்சில் துப்பும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் ஒருவர், தட்டில் ரொட்டிகளை வைக்கும்போது, எச்சில் துப்பி வைக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக ஜானி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சோயிப் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை திங்கட்கிழமை ஜானி கால்வாய் பாலம் அருகே போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுபோன்ற செயல்கள் பொதுமக்கள் நம்பிக்கையையும் உணவுப் பாதுகாப்பையும் மிக மோசமாக பாதிக்கக்கூடியவை என சமூகத்தில் கண்டனம் எழுந்துள்ளது.
मेरठ के थाना जानी क्षेत्र से वायरल एक वीडियो ने लोगों में आक्रोश की लहर फैला दी है. वीडियो में एक व्यक्ति को रोटी बनाते समय जानबूझकर उस पर थूकते हुए देखा गया, जो न केवल घिनौना और अमानवीय कृत्य है, बल्कि स्वास्थ्य के लिए भी गंभीर खतरा उत्पन्न करता है.
पुलिस ने मामले का संज्ञान… pic.twitter.com/3eGMFBTCXH
— AajTak (@aajtak) May 27, 2025
“>
இந்தச் சம்பவம், நாட்டின் பல பகுதிகளில் அடிக்கடி நிகழ்ந்து வரும் மனிதாபிமானமற்ற செயல்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. உணவிலும் பானங்களிலும் எச்சில் துப்புதல், அல்லது பிற அருவருப்பான செயல்கள் நடைபெறுவது, பொதுமக்கள் மட்டுமல்லாது, சமூக அமைப்புகளும் இத்தகைய செயல்களை கண்டித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தியுள்ளனர்.
UP : मेरठ में रोटी पर थूक लगाने का वीडियो हुआ वायरल, आरोपी शोएब गिरफ़्तार #Meerut | Uttar Pradesh | #UttarPradesh | Meerut pic.twitter.com/upLcsm8Lsa
— News24 (@news24tvchannel) May 27, 2025
“>
குற்றவாளிகளை கைது செய்வது மட்டும் போதாது, உணவுத் தயாரிப்பு மையங்களில் தெளிவான கண்காணிப்பு, தண்டனை, மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியமாக உள்ளன என்பது இச்சம்பவத்தின் முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.