
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தை சேர்ந்த 4-ல் இருந்து 7 வயதுக்கு உட்பட்ட 2 சிறுவர்கள் 2 சிறுமிகளில் என 4 குழந்தைகள் ஒன்றாக விளையாடி கொண்டிருந்தனர். குழந்தைகளின் பெற்றோர்கள் விவசாய நிலம் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
இந்த சமயத்தில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் அங்கு நிறுத்த பட்டிருந்த கார் ஒன்றின் உள்ளே ஏறி விளையாட துவங்கியுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக கார் கதவு லாக் ஆகிவிட்டது.
இதனால் வெளியில் வர முடியாத குழந்தைகள் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .