சீனாவின் சென் என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட மருத்துவ ரீதியான பிரச்னை, உலகம் முழுவதும் மருத்துவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினசரி வேலைச்சுமை மற்றும் தூக்கமின்மை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால், சிறிய அதிர்வெண் குரல்களை கேட்க முடியாத நிலை அவருக்கு வந்துள்ளது. அதாவது, ஆண் குரல்களை மட்டுமே கேட்க முடியாமல், பெண்களின் குரல்களை மட்டும் கேட்கக்கூடிய அரிய வகை பிரச்சனையை சந்தித்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவெனில், இது ஒரு மிகவும் அபூர்வமான காது கேளாமை வகையாகும் – மருத்துவர்களால் இது Reverse-Slope Hearing Loss (RSHL) என அழைக்கப்படுகிறது.
இந்த பிரச்னை தொடங்குவதற்கு முந்தைய இரவு, சென் தனது காதுகளில் சத்தம் (Tinnitus) கேட்டு, அதனுடன் வாந்தி எடுத்ததாகவும், மறுநாள் காலையில் தனது காதலனின் குரல் கேட்க முடியாமல் போனதாகவும் தெரிவித்தார். மருத்துவமனையில் அவரை சிகிச்சையளித்த டாக்டர் லின் சியாவோக்கிங் கூறியதாவது, “சென் எனது குரலை நன்றாகக் கேட்க முடிந்தது. ஆனால் அருகில் இருந்த ஆண் நோயாளியின் குரலை அவர் முற்றிலும் கேட்க முடியவில்லை” என தெரிவிக்கிறார். இது குறைந்த அதிர்வெண் கேட்கும் இழப்பு, ஆண் குரல்கள் போன்ற ஆழமான ஒலிகளை கேட்க முடியாத நிலையாக இருப்பதாகவும், இது மிகவும் அரிதாக காணப்படும் நிலையாகும் என்றும் கூறப்படுகிறது.
இது போன்ற நிலை திடீரென ஏற்படுவதற்கு இரத்த நாள ஒட்டுக்கேட்டுகள், அதிர்ச்சி, அல்லது உள்ளக் காதை பாதிக்கும் ஆட்டோ இம்யூன் கோளாறுகள் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் விரைவில் கண்டறிந்தால், காது கேளாமையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. “48 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் பெரும்பாலும் முழுமையாக குணமாக வாய்ப்பு அதிகம்,” என அமெரிக்காவின் நியூயார்க் பிரஸ்பைடேரியன் மருத்துவமனை ஆடியாலஜிஸ்ட் மிச்செல் கிராஸ்கின் கூறுகிறார். சென் தற்போது ஓய்வு எடுத்து வருவதால், அவரது கேட்கும் திறன் மீண்டும் மீளும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காது கேளாமை நகைப்புக்குரிய விஷயம் அல்ல, உடனடி கவனிப்பு மற்றும் சிகிச்சை வழங்கப்படவேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.