பெங்களூருவை சேர்ந்த 30 வயதான வக்கீல் அபிஷேக் MR, சினிமா தாமதமாக தொடங்கியதற்காக PVR, INOX மற்றும் BookMyShow மீது வழக்கு தொடர்ந்தார். 2023ஆம் ஆண்டு “சாம் பஹாதூர்” படம் பார்ப்பதற்காக மாலை 4:05க்கு மூன்று டிக்கெட் முன்பதிவு செயதுள்ளார். ஆனால் திரைப்படம் நேரத்திற்கு தொடங்காமல் 4:30 மணிக்கே ஆரம்பமானதாக  புகார் அளித்தார். அதிக நேரம் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதால் அவரது வேலை திட்டங்கள் பாதிக்கப்பட்டதாம். இதனால் நுகர்வோர் நீதிமன்றம், சினிமா தியேட்டர்கள் கூட்டமாக 25-30 நிமிடங்கள் வரை மக்களை வீணாக காத்திருக்க வைத்தது ஒரு “தவறான வணிக நடைமுறை”  எனக் கூறியுள்ளது.

இந்த வழக்கில், PVR Cinemas மற்றும் INOX இருவரும் அபிஷேக்கிற்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்க வேண்டும், மேலும் ரூ.5,000 மன அழுத்தத்திற்காக, மற்றும் ரூ.10,000 வழக்குத் தொடர்பான செலவுகளுக்காக வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், PVR மற்றும் INOX மீது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, அந்த தொகையை நுகர்வோர் நல நிதிக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அவர்கள் இந்த தொகையை 30 நாட்களில் செலுத்த வேண்டும்.

PVR மற்றும் INOX தங்களது பாதுகாப்பு முறையில், சமூக விழிப்புணர்வு விளம்பரங்களை திரையிடுவது சட்டப்படி அவசியம் என்று கூறினார்கள். ஆனால் நீதிமன்றம், சமூக விழிப்புணர்வு விளம்பரங்கள் 10 நிமிடங்களுக்குள் முடிவடைய வேண்டும் என்றும், முதன்மையான படங்கள் இவ்வளவு தாமதமாக தொடங்குவதற்கு காரணமாக இருக்கக் கூடாது எனக் கூறியது.