
பெரும்பாலும் நாம் சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் இருந்தாலும் அல்லது ஏதேனும் அசௌகரியம் இருந்தாலும் நாம் உடனே ஒரு ஸ்பூன் டைஜின் எடுத்து குடிக்கும் பழக்கம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. இந்த மருந்தில் அமில எதிர்ப்பு பண்பு இருக்கிறது. எனவே இதை வாங்கி குடிக்கின்றோம். ஆனால் அதுபோல் வாங்கி குடிக்க வேண்டாம் என்று அரசு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது வித்தியாசமான வாசனை கொண்டிருக்கும் இந்த டைஜின் டானிக் பிங்க் நிறத்தில் இருக்கும். இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும்.
ஆனால் சமீபத்தில் வெள்ளை நிறத்தில் வருகிறது. சற்று கசப்பு தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. புதினா, ஆரஞ்சு போன்ற ஃப்ளேவர்கள் சேர்க்கப்படுகின்றன. மருத்துவர்கள் இது போன்ற மருந்துகளை தங்களிடம் வருபவர்களுக்கு பரிந்துரை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அதேபோல இது போன்ற மருந்துகள் குறித்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.