மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வழங்கப்படும் தொழில் முறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக நான்கு சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 42% ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடப்பு ஜூலை முதல் டிசம்பர் வரை உள்ள மாதங்களுக்கான அகவிலைப்படியானது மூன்று சதவீதம் அதிகரிக்கப்பட்டு 45 சதவீதமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலங்கள் தொடங்கியிருக்கிறது. எனவே நடப்பு செப்டம்பர் மாதத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர்க்கு பிறகு அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் அமைச்சரவையின் மூலம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்த்தப்படும் என்பதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.