இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாவதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜானிலேயே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம், இன்னும் முடியாமல் உள்ளது. இதற்கான காரணம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியுமாகியுள்ளது. அதாவது, இந்த படத்தின் ஷீட்டிங்கிற்கு, ஒரு நாளைக்கு 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறதாம். இதனால், நிதி நெருக்கடி ஏற்பட்டு தான், ஷீட்டிங் தாமதம் ஆகிறதாம். மேலும், மார்ச் மாதமே முடிய இருந்த ஷீட்டிங், மே மாதம் வரை இழுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.