
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பு தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, அயலான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானியை கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வரும் நிலையில் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வார்.
அந்த வகையில் 80 கிலோ டெட்லிஃபிட் ஜிம்மில் இடுப்பில் பெல்ட் அணியாமல் செய்துள்ளார். இதனால் அவருக்கு முதுகில் பிடிப்பு ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 8 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் படுத்த படுக்கையாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் சிகிச்சையில் இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அவருக்கு ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.