பொதுவாக பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் தற்போது குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மயங்கிய நிலையில் கிடந்த  ஒரு பாம்புக்கு வாலிபர் ஒருவர் சிபிஆர் செய்து உயிரை காப்பாற்றியுள்ளார். அதாவது வதேரா மாவட்டத்தில் யாஷ் தத்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வனவிலங்கு ஆர்வலர் ஆவார்.

இவருக்கு ஒரு அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இறந்து கிடப்பதாக செய்தி வந்த நிலையில் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று இறந்த பாம்பினை கையில் எடுத்தார். பின்னர் அந்த பாம்பின் வாயோடு வாய் வைத்த ஊதி அதற்கு உயிர் கொடுத்தார். அவர் இருமுறை ஊதியும் அசைவில்லாமல் இருந்த பாம்பு மூன்றாவது முறை ஊதும் போது உயிர் பிழைத்தது. பின்னர் அந்த பாம்பினை வனத்துறையிடம் ஒப்படைத்தார். மேலும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.