தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மறைக்கப்பட்டு, தற்போதைய முதல்வர் விஜய்யின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான ஜெயக்குமார் கடுமையான சாடியுள்ளார்.

தவெக அரசின் இந்த நடவடிக்கை ஒரு ‘மலிவான அரசியல்’ என்று விமர்சித்துள்ள அவர், ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் உன்னத திட்டத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியைப் புகுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பதவியேற்ற சூழலில், அம்மா உணவகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அதிரடி மாற்றத்திற்கு அதிமுக தரப்பில் இருந்து தற்போது பலத்த எதிர்ப்புகளும் கண்டனங்களும் கிளம்பியுள்ளதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பும் புதிய விவாதமும் வெடித்துள்ளது.