
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிரதமர் மோடி கொண்டு வந்த அக்னி பாத் திட்டம் கிழித்து குப்பை தொட்டியில் வீசப்படும் என்று காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானாவில் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், பழைய நடைமுறைகளை மாற்றி அக்னி பாத் என்ற திட்டத்தை பிரதமர் அலுவலகம் உருவாக்கியதே தவிர ராணுவம் அல்ல.
முதல்முறையாக ராணுவ இந்திய வீரர்களை தொழிலாளர்களாக மாற்றியுள்ளார் மோடி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அக்னி பாத திட்டம் ரத்து செய்யப்படும் எனவும் ஏற்கனவே இருந்தது போல் நிரந்தர பணியுடன் கூடிய ஆள் தேர்வு முறை மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.