வியட்நாம் பயணத்தின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கும், அவரது மனைவி ப்ரிகிட் மேக்ரானுக்கும் இடையே விமானத்தில் இருந்து இறங்கும் போது சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதாக ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், ப்ரிகிட் தனது கணவரின் முகத்தில் அடித்ததாகக் காணப்பட்டது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, சர்ச்சையை கிளப்பியது.

இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த மேக்ரான், “எங்கள் இடையே எப்போதும் கேலி மற்றும் கிண்டல் நடந்துகொண்டே இருக்கிறது. அது ஒரு ஆபத்தான தருணம் இல்லை” என்று கூறினார். அதேசமயம், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் நகைச்சுவையாக பதிலளித்தார்.

தனது ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், “நான் மேக்ரானை தொடர்புகொண்டு அவரது நலனை கேட்டேன். அவர் நலமுடன் உள்ளார். ஆனால், அந்த நிகழ்வு நடந்தது பற்றி எனக்குத் தெரியவில்லை,” என கூறினார்.

மேலும், “உலகத் தலைவர்கள் தங்கள் மனைவியுடன் சண்டையிடும்போது கதவுகள் மூடியிருப்பதை உறுதி செய்துகொள்வது சிறந்தது” என்று நகைச்சுவையாக கூற, அங்கிருந்தோர்  சிரித்தனர்.